Saturday, September 14, 2024

இந்த படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு தான் நடிச்சேன்… வெப்பன் படம் பற்றி தான்யா ஹோப்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலகில் மிகவும் பிஸியாக உள்ளார் தான்யா ஹோப். கடந்த ஆண்டு அவர் நடித்த கப்சா (கன்னடம்), கிக், லேபிள், குலசாமி ஆகிய 4 படங்கள் வெளியானது. இந்த ஆண்டு ரணம், அறம் தவறேல், வல்லான், கோல்மால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘வெப்பன்’ படம் நாளை வெளியிடப்பட இருக்கிறது. இதில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் நடித்தது பற்றி தான்யா ஹோப் கூறியதாவது: “இயக்குனர் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, முதலில் என் மனதில் வந்தது, சத்யராஜ், ராஜீவ் மேனன், வசந்த் ரவி மற்றும் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன் என்பதே. இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. எனது மட்டுமல்ல, படத்தில் நடித்திருந்த அனைவருடைய கதாபாத்திரங்களும் வலுவானதாக இருக்கும்.

நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். வில்லன்கள் என்னை கட்டி வைத்து டார்ச்சர் செய்யும் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தாலும், இப்போது அதை திரையில் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வலிகளுக்குப் பின்னால்தான் இனிமை என்பதைக் கற்றுக் கொண்டேன்,” என அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News