அடுத்த வாரம் (மே 24) ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளியாவது படம் ‘பிடி சார்’. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கியுள்ளார். சமீபத்தில் இதன் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, “நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளராக அரண்மனை 4-ல் மீண்டும் களமிறங்கியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

குறிப்பாக, இந்தப்படத்தின் ‘குட்டிப் பிசாசே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று கூறினார்.”இந்த படம் உங்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கும். இப்படியொரு கதையை உருவாக்கிய கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஆரம்பத்தில் இந்த கதையை தயாரிப்பாளர் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கவே இல்லை.
ஆனால், இந்த கருத்தை நாம் சொல்லவேண்டும் என்று அவர் உறுதியாக கூறினார்,” என்றும் அவர் தெரிவித்தார்.”பிடி சார் வெகு சிறப்பாக வந்துள்ளது. இதில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. எனது மீது நம்பிக்கை வைத்து இப்படியொரு பிரமாண்ட படத்தை உருவாக்கிய வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள், கண்டிப்பாக மகிழ்வீர்கள். அனைவருக்கும் நன்றி,” என்றார்.