சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார், இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம் தற்போது, அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘எஸ்கே 23’ படத்தில் நடித்து வருகிறார், இதில் கன்னட நடிகை ருக்மணி வசந்தா நாயகியாக நடிக்கிறார்.



‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் இந்த படத்தில் இணைந்துள்ளார். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீரும் இதில் இணைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இதற்காக தாடியை வளர்த்துள்ளார், மேலும் பல தோற்றங்களில் வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்கு பிறகு பிஜூ மேனன் தமிழில் மீண்டும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.