தெலுங்கு சினிமாவின் மிகப் பிரபலமான இளம் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் விஷ்வக் சென், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். அவரது நடிப்பில், கடந்த ஆண்டு கேங்க்ஸ் ஆப் கோதாவரி, ஹாமி, மற்றும் மெக்கானிக் ராக்கி ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன.
தற்போது அவர் லைலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அகன்ஷா ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் விஷ்வக் சென், இப்படத்தில் ஆண் மற்றும் பெண் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், அவரின் ஆண் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது அவர் நடித்த பெண் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை ராம் நாராயண் இயக்க, ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி தயாரித்து வருகிறார். அடுத்த மாதம் 14-ஆம் தேதி இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், வரும் 17-ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.