Tuesday, November 19, 2024

அவர்கள் புதிய ஐடியாக்களை முயற்சிகிறார்கள்… மலையாள சினிமா குறித்து அனுராக் காஷ்யப் டாக்! #FOOTAGE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் ஒரு புலனாய்வு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் புட்டேஜ். ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனரும் சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவருமான அனுராக் காஷ்யப் இந்த படத்தை தான் வழங்கப் போவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “கடந்த ஒரு வருடமாக மலையாள திரை உலகில் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் விதமான படங்கள் வெளியாகி வருகின்றன. அவர்கள் மீண்டும் புதிய ஜானர்களை கண்டுபிடிக்கிறார்கள். புதிய ஐடியாக்களை முயற்சிக்கிறார்கள். அந்தவகையில் இந்த ‘புட்டேஜ்’ திரைப்படத்திலும் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்கள் என்பதுடன் அது உண்மையிலேயே ஒர்க்அவுட்டும் ஆகி இருக்கிறது. இந்தப் படத்துடன் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

அவரது இந்த பதிவுக்கு தனது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ள மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ள பதிவில், “வழக்கமான பாணியை உடைத்து புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு புரட்சிகரமான படங்களை கொடுக்கும், என்னுடைய பேவரைட்டுகளில் ஒருவரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்துடன் இணைந்துள்ளார் என்கிற செய்தியை கேட்டு என்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகள் இல்லாமல் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு இயக்குனராக இப்படி ஒரு படத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கு ‘புட்டேஜ்’ படத்தை விட சிறந்த படம் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News