Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நீங்கள் உங்களுக்குள் மகிழ்ச்சியை உருவாக்க முடியும்… நடிகை மஞ்சு வாரியர் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்ற ‘மனசிலாயோ’ பாடல் மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் தொடர்ந்து முன்னணி நட்சத்திரமாக நடித்து வரும் மஞ்சு, தமிழில் ‘அசுரன்’ மற்றும் ‘துணிவு’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். தற்போது, ரஜினிகாந்துடன் ஜோடியாக ‘வேட்டையன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

முன்னாள் கணவர் திலீப்புடனான விவாகரத்து, தனது மகள் மீனாட்சியின் பாசமின்மை போன்ற பலவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டும், மஞ்சு வாரியர் எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளவராகத் திகழ்கிறார். சமீபத்திய பேட்டியில், “மகிழ்ச்சியைக் காண்பதற்கு வெளியில் இருந்து உதவியை தேட வேண்டியதில்லை, அது நமக்குள்ளேயே உள்ளது. எந்த விஷயத்தையும் கேட்டு அல்லது பார்த்து மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என்ற எண்ணம் தவறு,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீங்கள் உங்களுக்குள் மகிழ்ச்சியை உருவாக்க முடியும். மகிழ்ச்சியை உணர்வதற்காக வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தனியாக இருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது சரியா தவறா எனத் தெரியாது, ஆனால் நான் விரும்பும் வரை எந்த வேலையையும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்க முடியும்,” என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News