70ஸ் கிட்ஸ்களுக்கும், 80களில் இளம் பருவத்தில் இருந்தவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் ‘வருஷம் 16’. பாசில் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கார்த்திக், குஷ்பு, ஜனகராஜ், சார்லி உள்ளிட்ட பலர் நடித்து 18 பிப்ரவரி 1989ம் ஆண்டு வெளிவந்த படம். இன்றுடன் 36 வருடங்களை நிறைவு செய்கிறது.மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் வெளிவந்த ‘என்னேன்னும் கண்ணேட்டன்டே’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் இந்த ‘வருஷம் 16’.கிராமத்து கோவில் திருவிழாவுக்காக தனது தாத்தா வீட்டுக்கு போகிறார் கார்த்திக். அவரது முறைப் பெண்ணான டில்லியில் வசிக்கும் குஷ்புவும் அந்த வீட்டுக்கு வருகிறார். இருவருக்குள்ளும் காதல் வருகிறது. ஆனால், இந்த காதலுக்கு குஷ்புவின் பாட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால், குடும்பத்தில் குழப்பம் வருகிறது. காதலர்கள் எதிர்ப்புகளை மீறி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
