Touring Talkies
100% Cinema

Friday, June 13, 2025

Touring Talkies

லோகேஷ் கனகராஜின் கைதி 2ல் இடம்பெறுகின்றனவா விக்ரம், சந்தானம் மற்றும் ரோலக்ஸ் LCU கதாபாத்திரங்கள்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும், அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை முடித்ததும், ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

‘கூலி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்ததும், லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடித்த ‘கைதி 2’ படத்தைத் தொடங்கவிருக்கிறார். இதில், முதல் பாகத்தில் நடித்த டில்லி கதாபாத்திரத்தை மீண்டும் கார்த்தி ஏற்கவிருக்கிறார். 

மேலும், ‘விக்ரம்’ படத்தில் கமல் நடித்த விக்ரம், விஜய் சேதுபதி நடித்த சந்தானம், சூர்யா நடித்த ரோலக்ஸ் ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களையும் இணைக்க திட்டமிட்டுள்ளார் என்றும் அதே நேரத்தில், இப்படத்தில் அனுஷ்கா ஒரு லேடி டான் வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News