கடந்த ஆண்டு விஜய்யை வைத்து “கோட்” படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. இதன்பின், அவர் தனது அடுத்த படத்தை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால், சிவகார்த்திகேயன் மற்றும் அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் வெங்கட்பிரபு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்ற தகவல் முன்பே வெளிவந்தது.
இந்த சூழலில், வெங்கட்பிரபு தனது முதல் ஹிந்தி படத்தை இயக்குவதற்காக அக்ஷய் குமாருடன் கடந்த சில மாதங்களாக கலந்தாலோசித்து வந்துள்ளார் என்றும் இப்போது, அக்ஷய் குமார் தனது அடுத்த படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், அக்ஷய் குமார் தற்போதைய தனது படங்களை முடித்து விட்டு, இந்த படத்தில் இணைவதற்கு 10 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.