பொதுவாக மார்ச் மாதம் வந்தாலே தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளியாவது குறைவாக இருக்கும். இதற்கான முக்கிய காரணம் அரசு விடுமுறை, பள்ளி ஆண்டுத் தேர்வுகளே என சில காரணங்கள் கூறப்படும். இருப்பினும், நேற்று மட்டும் எட்டு புதிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. எதிர்வரும் வாரங்களில் பட வெளியீடுகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 21ஆம் தேதி குறிப்பிடத்தக்க பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஓரிரு படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், மார்ச் 27ஆம் தேதி விக்ரம் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன் 2’ திரைக்கு வர உள்ளது. அந்த படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படங்களும் வெளியாவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
அதன் பின்னர், ஏப்ரல் 4ஆம் தேதி எந்த புதிய படத்தின் வெளியீடும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 10ஆம் தேதியில் ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘இட்லி கடை’ திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘இட்லி கடை’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.