மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத், ரித்தி குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி ராஜா சாப். ஹாரர்-காமெடி கலந்த இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், அக்டோபர் மாத இறுதிக்குள் முழுமை பெற உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்குகின்றன.
2026 ஜனவரி 9ஆம் தேதி சங்கராந்தி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், பிரபாஸின் பிறந்தநாள் அக்டோபர் 23ஆம் தேதி முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.