இந்த வருட தீபாவளிக்கு திரையரங்குகளில் பல படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வர இருப்பதால் கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே சில படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சில படங்கள் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பும் உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு பொங்கலிலும் பெரும் போட்டி உருவாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான தி ராஜா சாப் கூட வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் தற்போது ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் ஜனநாயகன் மற்றும் தி ராஜா சாப் படங்களுக்கு இடையே கடுமையான பாக்ஸ் ஆபிஸ் போட்டி உருவாக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.