மலையாளத்தில் சில படங்களில் நடித்த பின்பு, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

அதனைத் தொடர்ந்து, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’, விக்ரமுடன் ‘தங்கலான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது கார்த்தியுடன் ‘சர்தார்-2’ திரைப்படத்திலும், பிரபாசுடன் ‘ராஜா சாப்’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த படமாக மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார். சத்யன் அந்திக்காட் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ‘ஹிருதயபூர்வம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.