சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’ . இப்படத்தில் நாயகியாக கிர்த்தி ஷெட்டி, முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி பணிகள் முன்னதாக துவங்கிய சமயத்தில், வா வாத்தியார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் படத்தின் சில கூடுதல் காட்சிகள் தனியாக படமாக்கப்பட்டதால், போஸ்ட்–ப்ரொடக்ஷன் பணிகள் தாமதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் வெளியீடு டிசம்பர் 5ற்கு பதிலாக டிசம்பர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

