அனிமல்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ எனும் புதிய அதிரடி போலீஸ் கதாபாத்திரப்படத்தை இயக்குகிறார். நேற்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பாக ஒரு அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. அதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்த படத்தின் நாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கிறார். வில்லனாக விவேக் ஓபராய் நடிக்க, இசையமைப்பை ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் மேற்கொள்கிறார். இவர்களுடன் பழம்பெரும் நடிகை காஞ்சனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஞ்சனா, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இருப்பினும் 2017ஆம் ஆண்டு இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கிய ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பாட்டியாக நடித்தார். அதன்பின் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது மீண்டும் அதே இயக்குனர் சந்தீப் ரெட்டியின் இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

