நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ‘ஜெயிலர்’ கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. தற்போது, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி முதலில் படப்பிடிப்பு தேனியில் தொடங்க இருக்கிறதாம். இதற்குப் பிறகு, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சில நாட்கள் கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும், மற்றொரு தகவலாக முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது என்றும் பின்னர் கேரளாவில் நடைப்பெறும் என்று இரண்டு தகவல்கள் இணையத்தில் உலாவுகின்றன.