நடிகர் தனுஷ் இயக்கி, நாயகனாகவும் நடிக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. இதில் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களாக இந்த படத்திற்கான எந்தவித அப்டேட்டுகளும் வெளியாகவில்லை. இதே தேதியில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் ரிலீஸாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான புரமோஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் ரிலீஸ் ஆகும் என்பதைக் குறிப்பிடும் விதமாக ரசிகர்களை ஈர்க்கும் விளம்பரங்களும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இன்னும் இருபது நாட்களே இருக்கும் நிலையில் ‘இட்லி கடை’ பற்றிய எந்த தகவல்களும் வெளியாகாதது தனுஷின் ரசிகர்களுக்கு குழப்பமாக உள்ளது. திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? அல்லது வெளியீடு தள்ளிப்போகுமா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஆனால், ‘குட் பேட் அக்லி’ பற்றிய அப்டேட்களை ஜி.வி. பிரகாஷ் நேரடியாக வெளியிட்டு வருகிறாரே தவிர, ‘இட்லி கடை’ குறித்து அவர் எந்தவொரு தகவலும் பகிரவில்லை என்பதையும் ரசிகர்கள் கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.