அமரன் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனுடன், டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு எனும் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், சுதா கெங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், இதே படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக விஷாலுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகின. இதுகுறித்து விஷாலிடம் கேட்கப்பட்ட போது, அவர் இதனை மறுத்து, சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நான் நடிக்கவில்லை என உறுதியுடன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.