தமிழில் ‘96’ படத்தை இயக்கிய பிரேம் குமார், நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் அவரது 64வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

கடந்த சில வாரங்களாகவே இந்த படத்திற்கு கதாநாயகி மற்றும் முக்கிய நடிகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இதில் கதாநாயகியாக நடிகை ருக்மணி வசந்த் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சிவகார்த்திகேயனுடன் ‘மதராஸி’ படத்தில் நடித்துள்ளார். இப்போது விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் ருக்மணி வசந்த், தன் நடிப்பால் திரை உலகில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.