தமிழ் சினிமாவில் முக்கியமான மற்றும் பெயரெடுக்கும் இயக்குநராக விளங்கியவர் பி. வாசு. அவரின் மகன் சக்தி, தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.
அதற்குப் பிறகு சக்தி சிவலிங்கா, ஏழு நாட்கள் போன்ற சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சக்தி தற்போது இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் ஜெயம் ரவியின் 34வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், படத்தின் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.