கூழாங்கல்’ படத்தின் மூலம் திரையுலகில் நம்பிக்கை ஏற்படுத்திய இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜின் இரண்டாவது படம் ‘கொட்டுக்காளி’, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய வேடங்களில் நடித்தனர். இதைத் தவிர, படத்தில் புதுமுக நடிகர்களும் நடிக்க, இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார். படம் பின்னணி இசையில்லாமல் வெளியானது.
ஆனால், படம் வெளியாகிய பிறகு, அது அது ஒருபுறம் பார்வையாளர்களை கவர்ந்தாலும் மறுபுறம் பெரிதாக இந்த படம் மக்களின் மனதில் சரியான இடத்தை பெறமுடியவில்லை.இதனால், படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெறவில்லை என கூறப்பட்டது.
இதை குறித்து, இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் சமீபத்திய ஒரு நேர்காணலில் தனது கருத்தை தெரிவித்துள்ளார், இனிமேல் சூரி சார் ‘கொட்டுக்காளி’ போன்ற படங்களில் நடிக்க மாட்டார். இப்படத்துக்காக அவர் மிகுந்த உழைப்பை வழங்கினார். ஆனால், அவருக்கு ‘கருடன்’ படத்தில் கிடைத்த புகழ் இந்த படத்தில் கிடைக்கவில்லை. பலரும் ‘சூரி ஏன் இந்த படத்தில் நடித்தார்? என்றே கேள்வி எழுப்பினார்கள். அதனால், மீண்டும் இப்படி ஒரு படத்தில் அவர் நடிப்பாரா என்பது சந்தேகம் தான் என அவர் உருக்கத்துடன் கூறினார்.