Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புஷ்பா 2 படத்திற்கு பிண்ணனி இசை யார்? குழப்பத்தில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமாரின் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. இப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாக வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், அதன் வெற்றியால் தேசிய விருதும் பெற்றார். முதல் பாகத்தின் பாடல்கள் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பின்னணி இசையும் சிறப்பாக இருந்தது. இதே தேவி ஸ்ரீ பிரசாத் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்க தொடங்கியிருந்தார். படத்திற்கான அனைத்து பாடல்களையும் அவர் முடித்து விட்டார்; இன்னும் ஒரு பாடலுக்கு மட்டும் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

ஆனால், இப்போது இப்படத்திற்கான பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை; தமன் மற்றும் ‘காந்தாரா’ படத்திற்குப் பின்னணி இசையமைத்த அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கின்றனர் என கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்த பின்னணி இசை, இயக்குநர் சுகுமாருக்கும் நாயகன் அல்லு அர்ஜுனுக்கும் விருப்பமாக இல்லை என்று சொல்கிறார்கள். இதனால், தமன் இசையமைத்த பிறகு அதனை அடிப்படையாகக் கொண்டு யாருடைய பின்னணி இசையைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்ய உள்ளனர் என்ற உறுதிப்படுத்தபடாத தகவல் உலாவுகிறது.

- Advertisement -

Read more

Local News