Friday, October 11, 2024

முதல்நாள் வசூலில் டாப் எது? வேட்டையன் VS தி கோட் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். இதன் முதல் நாள் வசூல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளை மத்தியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

‘வேட்டையன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு புறம் நல்ல விமர்சனங்களையும் மறுபுறம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், இணையத்தில் முதல் நாள் வசூல் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஜய்யின் ‘கோட்’ திரைப்படம், முதல் நாளில் சுமார் 126 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, ‘வேட்டையன்’ படம் உலகளவில் 70 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது ‘கோட்’ படத்தை விட சுமார் 54 கோடி குறைவானது. எனினும், ‘வேட்டையன்’ படத்திற்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளதால் மற்றும் ஆயுத பூஜை விடுமுறை நாள்களில் படம் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News