Tuesday, September 24, 2024

எங்கு சென்றாலும் தமிழில்தான் பேசுவேன்…நீங்களும் எங்கு சென்றாலும் தமிழில் பேசுங்கள் – இயக்குனர் செல்வராகவன் வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் செல்வராகவன். அவரது முக்கியமான படங்களில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் அடங்கும். தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். பின்னர் சாணிக் காயிதம், பகாசூரன் போன்ற படங்களில் ஹீரோவாக முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் பர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன் போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். இவை முடிந்து, தற்போது தெலுங்கில் ரவி தேஜா மற்றும் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த இடைவேளையில், செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கை தத்துவங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், அதனை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “தமிழக மக்களிடத்தில் கெஞ்சிக் கேட்கிறேன். பாரதியார் தான் தமிழ்மொழி மெல்ல சாகும் என்று சொல்லினார். இன்று அந்த நிலை உண்மையாக மாறி, தமிழ் மொழி ஐசியூவில் வெண்டிலேட்டரில் இருக்கிறது. தமிழில் பேசுவதற்கு அவமானம் என்ற உணர்வு சிலரிடத்தில் உள்ளது. எனக்கு ஆங்கிலத்தில் பேசுவதின் அவசியம் புரிந்தாலும், பள்ளி, கல்லூரி நாட்களில் ஆங்கிலம் பேச முடியாமலிருந்தால் அவமானம் அனுபவித்து அழுத நாட்கள் உண்டு. பின்னர் நான் ஆங்கில புத்தகங்களை படித்து, அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டேன். ஆனால், எங்கு சென்றாலும், தமிழில் தான் பேசுவேன். நீங்களும் எங்கு சென்றாலும் தமிழில் பேசுங்கள். பெருமையாக தலைநிமிர்ந்து பேசுங்கள். தமிழில் பேசுவதற்காக யாராவது அவமானப்படுத்தினால், அந்த பிகரே தேவையில்லை. தமிழில் பேசும் தமிழகப் பெண்ணே போதும். வெளிநாட்டில் பலரும் தங்கள் தாய் மொழியிலேயே பேசுகிறார்கள். தமிழ் மொழி உலகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். அதற்காக நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News