Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘லப்பர் பந்து ‘ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் “அட்டக்கத்தி” தினேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான படம் “லப்பர் பந்து”. இந்த படத்தில், யாராலும் எளிதில் தோற்கடிக்க முடியாத உள்ளூர் பேட்ஸ்மேனாக ‘கெத்து’ எனும் பூமாலை (தினேஷ்) மிகுந்த வலிமையுடன் விளங்குகிறார். கல்யாண வயதில் பெண் இருந்தாலும், மனைவியையும், வேலைகளையும் தாண்டி போட்டிகள் நடைபெறும் ஊர்களில் சுற்றி கோப்பைகளை ரகசியமாக குவிக்கிறார் கெத்து. இதற்கிடையில், வளரும் பந்துவீச்சாளர் அன்பு (ஹரிஷ் கல்யாண்) கெத்துக்கு பிரதான எதிரியாக வருகிறது. மைதானத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சனைகள் ஏற்படுகிறது, இதனால் பின்னர் வெடிக்கும் சண்டைகள் படத்தில் முக்கியமான பகுதியாக உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகும் ஈகோ சண்டைகளுக்கு நடுவில் கெத்துவின் மகள் மற்றும் அன்புவின் காதல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை நகைச்சுவையுடன் கூறியுள்ளார் இயக்குநர் தமிழரசன்.

“பார்க்கிங்” பட வெற்றியின் மூலம் தனது அடுத்த கட்டத்தை அடைந்த ஹரிஷ் கல்யாண், கதை தேர்வில் தன்னுடைய தேர்ந்தவரை இந்த படத்தில் நிரூபித்துள்ளார். ஈகோ சண்டைகளில் சீறிப்பாய்வதும், நகைச்சுவைக் காட்சிகளில் சிறப்பாக நடிப்பதும் மூலம் ஹீரோவாக அழகாக மிளிருகிறார். தினேஷின் கிரிக்கெட் காட்சிகள் பார்வையாளர்களை கைதட்டி ரசிக்க வைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு பயப்படுவதிலும், காதலுடன் சேர்ந்து கொஞ்சுவதிலும், சோகத்தில் அழுவதிலும் தினேஷின் நடிப்பு மனதில் நிற்கிறது. கெத்து கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் நினைவூட்டல்கள் படமெங்கும் பரவலாக இருக்கின்றன.

தினேஷின் நண்பராக வரும் கதாபாத்திரம், ஹரிஷ் கல்யாணுக்கு நண்பனாக வரும் பால சரவணன், இருவரும் மைதானத்தின் வெளியில் வாய் தகராறு செய்வது, ஒவ்வொரு பந்துக்கும் ஒருவரை ஒருவர் சீண்டுவது போன்ற காட்சிகள் அரங்கத்தில் பார்வையாளர்களை சிரிக்கவைக்கின்றன. கெத்துவின் கடுமையான மனைவியாக நடித்த சுவஸ்திகா விஜய் தனது நடிப்பால் பாராட்டை பெறுகிறார். கிரிக்கெட் விளையாடியதற்காக தினேஷை சுட்டிக்காட்டும் காட்சிகளில் சுவஸ்திகாவின் நடிப்பு மிகவும் நம்பகமாக இருக்கும். கீதா கைலாசம் வெகுளியான மாமியாராகவும், ஹீரோயின் சஞ்சனா உங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். நடிகர் காளி வெங்கட் போன்றோர் அவர்களது கதாபாத்திரங்களை மிகவும் இயல்பாகவே ஆவி மற்றும் ஊர்காரராகவே மாறியுள்ளனர்.

“லப்பர் பந்து” கிராமங்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் இருக்கும் கிரிக்கெட் அணிகளையும் மையமாக்கி கதை நகர்கிறது. இடையிடையே சாதிய மற்றும் பாலின பாகுபாடுகளை நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர், அதே சமயத்தில் போரடிக்கக்கூடிய வசனங்கள் இல்லாமல் துல்லியமாக கதை நகர்கிறது.

கிரிக்கெட் மீது உள்ள காதலால் இரு முக்கிய கதாபாத்திரங்களும் வீடுகளில் அனுபவிக்கும் பிரச்சனைகளையும், அவர்களது ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். சாதி மறுப்பு திருமணம் மற்றும் அரசியலாகிவிட்ட மாட்டிறைச்சி பிரச்சனைகளை இயல்பாக கையாளும் இயக்குநரின் தைரியம் பாராட்டத்தக்கது. கிரிக்கெட் கலவரத்துக்குள் மாட்டியுள்ள மகளை பொறுப்புடன் கையாளும் பெற்றோரின் கதாபாத்திரங்களை உருவாக்கிய எழுத்தாளர் தமிழரசனின் திறமையைப் பாராட்ட வேண்டும்.

- Advertisement -

Read more

Local News