கேரள திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டி, சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து மிருகிக்கிறார். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள மம்முட்டியின் சமீபத்திய பிரம்மயுகம்” நல்ல வரவேற்பைப் பெற்றது
மம்முட்டியின் மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்” படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது. இந்நிலையில், துல்கர் சல்மானுடன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பாரா என்ற கேள்விக்கு மம்முட்டி பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “அது நடக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் அதற்கு சில காலம் ஆகலாம்” என்றார். இதற்கிடையில், 2009-ல் வெளியான “பிக் பி” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் “பிலால்” படத்தில் மம்முட்டியும் துல்கர் சல்மானும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இயக்குனர் அமல் நீரத் விரைவில் “பிலால்” படத்தில் பணியை தொடங்குவார் என்று கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.