நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்திலும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘ப்ரோ கோடு’ என்ற புதிய படத்தை தயாரித்து நடிக்கிறார்க்ஷ இந்தப் படத்தை கார்த்தி யோகி இயக்கவிருக்கிறார்.

அதேபோல் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு புதிய திரைப்படத்தை ரவி மோகனே தயாரித்து இயக்கவுள்ளார். இந்தப் படம் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடும்பத்தை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு கதையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தில், ரவி மோகனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.