இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்ப்பை விட குறைந்த அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முடிவுகள் ரசிகர்களிடையே சிறிதளவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், அதனைத் தொடர்ந்து, வரும் பொங்கல் திருநாளில் ராம்சரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கேம் சேன்ஜர் திரைப்படம் ஷங்கரின் இயக்கத்தில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், தனது அடுத்த பிரம்மாண்டமான திட்டமான வேள்பாரி குறித்து இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். வேள்பாரி படத்திற்கான திரைக்கதை முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும், இதில் நடிக்க தகுதியான, திடக்காத்திரம் மற்றும் கம்பீரம் கொண்ட நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரிய அளவிலான பட்ஜெட்டைக் கவனிக்கக்கூடிய நடிகர்களே தனது முதல் விருப்பமாக இருக்கும் என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான மற்ற விவரங்களை தொடர்ந்து சேகரித்து வருவதாகவும், அனைத்தும் உறுதியாகிவிட்ட பிறகு புதிய தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.