2020 ஆம் ஆண்டு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில், வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகிறது. இந்தப் படத்தில் மீண்டும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ஆனால், முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, இந்த தொடரை இயக்கவில்லை. அவருக்கு பதிலாக, புகழ்பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இப்படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் சுந்தர்.சி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பூஜை விழா வரும் மார்ச் 6 ஆம் தேதி, சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மார்ச் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.