இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ஆக்ஷன் திரைப்படம் ‘மதராஸி’. இதில் கதாநாயகியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகரான வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் திரைக்கு வர இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற ஜூலை 24 அல்லது 25ம் தேதிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.