‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தின் வேலைகளில் இயக்குனர் நாக் அஸ்வின் முழு தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு தாமதமாகத் துவங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் நாக் அஸ்வினிடம், ‘கல்கி 2 எப்போது?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கடந்த முறையிலேயே நான் கூறினேன், 3 அல்லது 4 கிரகங்கள் இணையும் பொழுதே ‘கல்கி 2898 ஏடி’ வெளியாகும் என்றேன். இப்போது, ஏழு அல்லது எட்டு கிரகங்கள் இணையும் நேரத்தில் தான் இரண்டாம் பாகம் திரைக்கு வரும்” என்று நகைச்சுவை கலந்த பதிலை அளித்தார்.
அவரது பதில் நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. இதற்கிடையே, நாக் அஸ்வின் மற்றும் நடிகை ஆலியா பட்டுடன் இணைந்து புதிய ஒரு திரைப்படத்தில் பணியாற்ற உள்ளார் என்ற வதந்தியும் திரையுலகில் பரவி வருகிறது.