Friday, January 3, 2025

அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் எப்போது? எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம், முதலில் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், இப்போது இப்படம் பொங்கல் ரிலீஸ் திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது. எனினும், அடுத்தது விடாமுயற்சி எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த இடைவெளியில், கோலிவுட்டில் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன் படி, விடாமுயற்சி படத்தை ஜனவரி 23ஆம் தேதி குடியரசு தினத்துக்கான சிறப்பு வெளியீடாக அல்லது பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாவதால், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக விடாமுயற்சி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரத்தில், லைகா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகே இப்படத்தின் சரியான வெளியீட்டு தேதி உறுதியாக தெரியவரும்.

- Advertisement -

Read more

Local News