Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் எப்போது? ரசிகர்களை மகிழ்ச்சியில் துள்ள வைத்த அப்டேட்! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வேட்டையன்”. இந்த படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் சமீபத்தில் வெளியான “மனசிலாயோ” பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், கிஷோர், பகத் பாசில், ரோகினி, அபிராமி உள்ளிட்ட நடிகர்களின் கதாபாத்திர வீடியோக்கள் வெளியிடப்பட்டன அதேபோல், ஒரு ப்ரிவியூ டீசரில், ரஜினிகாந்த் “என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட்” கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், “வேட்டையன்” படத்தின் ட்ரெய்லர் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News