பல வருடங்களுக்கு பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’ இப்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றுகிறார்.
‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி, இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 16ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.