இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருக்கும் ‘தக்லைப்’ படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்து ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் படங்களில் தொடர்ந்து நடிக்கவிருக்கிறார்.

அதில், தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 50வது படத்தை சிம்பு தானே தயாரித்து நடிக்க உள்ளார். மேலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 51வது படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார், இதில் அவர் கதாபாத்திரத்திற்கு ‘காட் ஆப் லவ்’ என பெயர் வைத்துள்ளனர்.


இத்திரைப்படம் காதல் கதையாக உருவாகினாலும், முழுக்க முழுக்க காதல் மட்டும் அல்லாமல், சில புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக, சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தின் பாணியில், ஆனால் மாறுபட்ட கோணத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கூட, இப்படம் ஃபேண்டஸி என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக இருக்கும் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.