அயன் முகர்ஜி இயக்கத்தில், ப்ரிதம் இசையமைப்பில், ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வார் 2’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தணிக்கை முடிந்து ‘யு-ஏ 16 +’ சான்றிதழைக் கொடுத்துள்ளார்கள். 16 வயதுக்குக் கீழுள்ளவர்கள் பெற்றோர் வழிகாட்டுதலுடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம். படத்தின் நீளம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
