பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான சுமா, தனது கனவில் காண்பவை சில நேரங்களில் உண்மையாகவே நடக்கின்றன என கூறியுள்ளார்.சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “ஒரு முறை படப்பிடிப்பின்போது நடிகர் ஒருவருக்கு கால் உடைந்தது போல நான் கனவு கண்டேன். அப்போது மொபைல் போன்கள் இல்லாத காலம். லேண்ட்லைன் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அவரை உடனே தொடர்பு கொள்ள முடியாமல் மறுநாள் காலை போன் செய்தேன். ‘நீங்கள் நலமா?’ என்று கேட்டபோது, அவர் ‘எனக்குக் கால் உடைந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டார். அப்போது நான் அந்தக் கனவைப் பற்றி சொல்லியபோது அவர் ஆச்சரியப்பட்டார்.
மேலும், ஒரு முறை கோவிலுக்குச் செல்வதுபோல் கனவு கண்டேன் மறுநாள் அதே கோவிலுக்குச் சென்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பயணித்த ஒரு விமானம் விபத்துக்குள்ளாவதாக கனவு கண்டேன். அதன்பிறகு விமானத்தில் ஏறவே பயந்துவிட்டேன். சில நேரங்களில் எனக்கு வரும் கனவுகள் இப்படி உண்மையாக மாறுவதால், அதே சமயம் பயமுறுத்துவதாகவும் இருக்கும் என சுமா கூறியுள்ளார்.

