Monday, November 25, 2024

நான் இவருக்கு செய்ததுதான் தேவையற்ற செலவு… ஒ மை காட் சமந்தா என்ன இப்படி போட்டு உடைச்சிட்டாங்க…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். சில வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்து சென்றனர். இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகை சோபிதா துலிபலா இடையே ஹைதராபாத்தில் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சமந்தா நடித்த சமீபத்திய வெப் சீரிஸான ‘சிட்டாடல் – ஹனி பன்னி’ புரமோஷன் நிகழ்ச்சிக்காக அமேசான் ஒரு ‘ரேப்பிட் பயர்’ கேள்வி-பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் நடிகர் வருண் தவான், உங்கள் மிகப்பெரிய, தேவையற்ற செலவு எது? என்று சமந்தாவிடம் கேட்டார். இதற்கு சமந்தா, “எனது முன்னாள் கணவருக்கான விலையுயர்ந்த பரிசுகள்” என சுவாரஸ்யமாக பதிலளித்தார். எவ்வளவு?” என்று வருண் மீண்டும் கேட்டபோது, “நிறையவே” என்றார் சமந்தா. உடனே, அடுத்த கேள்விக்குப் போவோம் என கூறி பேச்சை முடித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதுடன், ரசிகர்களிடையே விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

- Advertisement -

Read more

Local News