Monday, November 18, 2024

மோகன்லால் நடித்துள்ள பரோஸ் படத்துக்கு என்னதான் ஆச்சு? #BARROZ 3D

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் மோகன்லால் முதல்முறையாக பரோஸ் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மை டியர் குட்டிச்சாத்தான் படத்திற்கு கதை எழுதிய பிரபல கதாசிரியர் ஜிஜோ பொன்னூஸ் என்பவர் தான் கதை எழுதியுள்ளார். வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்தபோது தான் சேர்த்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக ஒரு பாதுகாவலரை விட்டுச் சென்றதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அவரை மையப்படுத்தியே இந்த கதை உருவாகியுள்ளது.

இந்த படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியரும் கேரளாவை சேர்ந்த மலையாள எழுத்தாளரான ஜார்ஜ் தூண்டிப்பரம்பில் என்பவர் இந்த படத்தின் கதை தான் எழுதிய மாயா என்கிற நாவலின் காட்சிகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டி இருந்தார். ஆனாலும் தற்போது பரோஸ் படத்தின் ரிலீஸ் வேலைகள் வேகம் எடுத்து இருப்பதால் இந்த காப்பிரைட் பிரச்சனை தீராமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது குறித்து பதில் அளிக்க நடிகர்கள் மோகன்லால், கதாசிரியர் ஜிஜோ பொன்னூஸ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் இயக்குனர் டிகே ராஜீவ் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் எழுத்தாளர் ஜார்ஜ் தன்னுடைய நண்பரிடம் இந்த கதை பற்றி கூறியிருந்ததாகவும் அந்த நண்பர் கடந்த 2016ல் இயக்குனர் டி.கே ராஜீவ் குமாரிடம் இந்த கதையை படமாக்குவது பற்றி பேசினார் என்றும் அவர் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் என்று சொல்லிவிட்டு கதாசிரியர் ஜிஜோ பொன்னூஸிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னவர் அதன் பிறகு அந்த விஷயத்தை பற்றி பேசவே இல்லை என்றும் கூறியுள்ளதுடன் அதன்பிறகு தான் தனது கதையை பரோஸ் என்கிற பெயரில் படமாக்கி உள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதில் இயக்குனர் டி.கே ராஜீவ்குமார் பரோஸ் பட உருவாக்கத்தில் மோகன்லாலுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டு வந்தவர். இவர்தான் கமல் மலையாளத்தில் நடித்த சாணக்யா படத்தை இயக்கியதுடன் கமல் நடிப்பில் உருவாவதாக இருந்து பின்னர் நின்று போன சபாஷ் நாயுடு படத்தை இயக்குவதற்கும் முதலில் ஒப்பந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News