தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கும் எஸ்.ஜே.சூர்யா, நீண்ட நாளாகவே தனது ஒரு கனவு படத்தை இயக்க ஆசைக் கொண்டிருந்தார். தற்போது அவர் அந்த கனவு படமான ‘கில்லர்’ படத்தை இயக்க போகிறார். இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா ரீதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கின்றார். ‘கில்லர்’ படத்தின் பூஜை கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தளங்களில் இந்த பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முன்பு ‘வாலி’, ‘குஷி’ போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக என்ட்ரி கொடுக்கிறார். இதைத் தொடர்ந்து, தனது சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்த பதிவில், கில்லர் பட அறிவிப்புக்கு எனக்கு அளவில்லாத அன்பைக் காட்டிய ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள். என்ன தவம் செய்தேன் இந்த அன்பை பெறுவதற்கு, ‘கில்லர்’ பட அப்டேட்கள் விரைவில் வரும் என்று பதிவிட்டுள்ளார்.