தமிழ் சினிமாவின் இரண்டு கண்களான ரஜினியும், கமலும் நீண்ட வருடங்களுக்கு பின் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். அதற்கு முன்னதாக கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தலைவர் 173 படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் திடீரென சுந்தர்.சி இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். அதில் ‛தவிர்க்க முடியாத சூழலால் இப்படத்திலிருந்து விலகுகிறேன். இது உண்மையில் எனக்கு கனவு நனவாகும் படம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன” என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, சுந்தர் சி ‘தலைவர் 173’ படத்தில் இருந்து விலகியது குறித்து அவரது கருத்தை அறிக்கையாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை பொருத்தவரை நான் தயாரிப்பாளர். என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்குப் பிடிக்கும் வரை கதை கேட்டுக்கொண்டே இருப்போம். கதை நன்றாக இருந்தால் புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புண்டு. நானும் ரஜினியும் நடிக்கும் படத்திற்கான கதையும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம் என்றுள்ளார்.

