பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எல் 2 எம்புரான்’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்தவர்கள், இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.200 கோடி இருக்கலாம் என எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் இயக்குனர் பிரித்விராஜ் கூறிய உண்மை தகவல், பிரம்மாண்ட படங்களை இயக்கும் இயக்குனர்களையே ஆச்சரியப்படுத்தி இருக்கலாம்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது, பிரித்விராஜ் கூறியதாவது, “எங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், அதை படம் தயாரிப்பதற்காகவே செலவிட்டோம். இது சம்பளமாக மட்டும் ரூ.80 கோடி செலவிடப்பட்டு தயாரிப்பிற்காக ரூ.20 கோடி மட்டுமே செலவிடப்பட்ட படம் இல்லை என்று தெரிவித்தார்.
பல கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களான மோகன்லால் மற்றும் இயக்குனராக இருக்கும் பிரித்விராஜ் ஆகியோரது முழுமையான அர்ப்பணிப்பைப் பார்த்தால், மற்ற பிரபலங்கள் கூட தங்களை மாற்றிக் கொள்வார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்