இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில், ஹேமா கமிட்டியின் அறிக்கை பற்றி அவர் கூறியதாவது, “திரைத்துறையின் ஒரு பகுதியாக நாம் இதைப் பற்றி பேச வேண்டியது அவசியமாகும். ஒரு பெண் தன்னால் பாதிக்கப்பட்டதாக முன்னிட்டு பேசினால், முதலில் அந்தப் பெண்ணிடம்தான் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

நீங்கள் ஏன் அப்போது இதைப் பற்றி கூறவில்லை? நீங்கள் சந்தர்ப்பம் தரவில்லை என்றால் இப்படிப் பட்ட சம்பவங்கள் நடந்திருக்குமா என்பதைக் கேட்கிறார்கள். இது மிகவும் துரோகம் செய்யும் செயலாகும். குற்றம்சாட்டப்படும் நபர் எவ்வளவு பெரியவர் என்றாலும், நாம் பாதிக்கப்பட்டவரின் பக்கம் தானே நிற்க வேண்டும்.
இப்போது வரை அந்த நபர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதால் அவர் நல்லவர் என்ற அடிப்படையில் முடிவெடுக்க கூடாது. குற்றச்சாட்டுக்கு எதிராக தன்னை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவரிடம்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.