பெருநகரங்களிலிருந்து கிராமப்புறங்கள்வரை அனைத்து மக்களும் தரமான ஓ.டி.டி. சேவையை அனுபவிக்கச் செய்யும் நோக்கில், மத்திய அரசு பாரத்நெட் நிறுவனத்துடன் இணைந்து வேவ்ஸ் ஓ.டி.டி. சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவா தலைநகர் பணஜியில் நடைபெற்ற 55வது சர்வதேச திரைப்பட விழாவின் போது, கோவாவின் முதல்வர் பிரமோத் சவந்த் வேவ்ஸ் ஓ.டி.டி. சேவையை துவக்கி வைத்தார். இந்த சேவையில் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், வங்காளம், மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உள்ளிட்ட 12 மொழிகளில் 10க்கும் மேற்பட்ட வகையான நிகழ்ச்சிகள் வழங்கப்பட இருக்கின்றன.
வேவ்ஸ் சேவையின் மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், வானொலி சேவைகள் மற்றும் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என 65க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களின் சேவைகளை மக்கள் பெற முடியும். மேலும், தொழில்நுட்ப உதவியுடன் இணைய வழி வணிகத்தை மேம்படுத்த வேவ்ஸ் ஓ.டி.டி. ஒரு பாலமாக செயல்படவுள்ளது.