ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த அர்த்திகாவுக்கு அண்மையில் திருமணமானது. இதனையடுத்து அவர் இறந்துபோவது போல் காண்பித்து சீசன் 1 ஐ முடித்து வைத்துவிட்டனர். அதேகையோடு சீசன் 2 வையும் ஆரம்பித்து முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் லாஞ்ச் செய்துள்ளனர். இந்நிலையில், அருண் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அயுப் தற்போது கார்த்திகை தீபம் சீரியலை விட்டு விலகியுள்ளார். சீரியல் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அயுப் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
