Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மணி சாரின் அடுத்த படத்திற்க்காக காத்திருக்கிறேன்… மனிஷா கொய்ராலா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024ஆம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இவ்விழா நவம்பர் 28ஆம் தேதி வரை தொடர்கிறது. பல்வேறு சினிமா பிரபலங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவையொட்டி, கலா அகாடமியில் “Mastering the Unseen” என்ற தலைப்பில் உரையாடல் நடைபெற்றது. இதில் மணிரத்னம் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை மனிஷா கொய்ராலா கூறியதாவது, திரைப்படங்கள் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். திரைத்துறையின் சிறந்த நபர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். மணிரத்னம் சார் மிகவும் சிறந்த நபர். அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். சமீபத்தில் அவரது ‘பொன்னியின் செல்வன்’ படங்களை பார்த்து வியந்தேன். கமல் ஹாசனை வைத்து இயக்கும் அவரது அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன், என்றார்.

- Advertisement -

Read more

Local News