Monday, January 6, 2025

மதகஜராஜா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் உடல் நடுக்கத்துடன் காணப்பட்ட விஷால்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்… விஷாலுக்கு என்னதான் ஆச்சு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைப்பில், விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மத கஜ ராஜா’. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

நேற்று, இப்படத்தின் வெளியீட்டிற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால், விழா அரங்கிற்குள் நுழையும்போது மிகவும் மெதுவாக நடந்து வந்தார். உடல் மிகவும் இளைந்து காணப்பட்டார். மேடையில் பேசும்போது அவரது கை நடுங்கியதுடன், சொற்கள் சரியாக தொடரவில்லை; இடைவிடாது நிறுத்திக் கொண்டு பேசினார். நீண்ட நேரம் நிற்க முடியாத நிலை காரணமாக உட்காரச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர், விஷால், விஜய் ஆண்டனி, சுந்தர் சி ஆகியோருடன் தொகுப்பாளர் கலந்துரையாடும் வகையில் நிகழ்ச்சி முன்னேற்றப்பட்டது.

விஷால் பேசியதைக் கேட்ட சிலர் யூட்யூபில் நேரடியாக பார்த்து, “விஷாலுக்கு என்ன ஆகிவிட்டது?” என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தனர். இதற்கு, தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, விஷால் கடுமையான வைரஸ் காய்ச்சலுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக விளக்கம் அளித்தார். காய்ச்சலுடன் இருந்த விஷாலை நிகழ்ச்சிக்கு வர யாரோ கட்டாயப்படுத்தியதாகவும் சந்தேகம் எழுந்தது. ஆனால், பல சிக்கல்களை சமாளித்து 12 வருடங்களுக்குப் பிறகு வரும் படமாக இருப்பதால், தனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், விஷால் தன்னார்வமாகவே நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறப்பட்டது.

- Advertisement -

Read more

Local News