கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களுடன், விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், ஜனனி ஐயர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான சிறந்த இசை ஆல்பங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. காதலர்களால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியலில் இது இடம்பிடித்திருக்கிறது. சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படம், வெளியானபோது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியானது முதல் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.