Tuesday, February 11, 2025

புதிய திரைப்படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மற்றும் ‘ரெய்டு’ போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு ‘இறுகப்பற்று’ திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது அவர் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

மாஸ்டர், லியோ, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும், அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமாரும் இப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறனின் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் திரைக்கதையை ‘டாணாக்காரன்’ புகழ் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்ற, ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கவனிக்கிறார். தற்போது, இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இதில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன.

- Advertisement -

Read more

Local News