Monday, November 18, 2024

8 நாட்கள் நடிக்க வந்த விஜய்சேதுபதி 120 நாட்கள் நடித்து விட்டார் – இயக்குனர் வெற்றிமாறன் ! #VIDUTHALAI PART 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடுதலை” படம் குறித்து ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த இயக்குநர் வெற்றிமாறன், முதலில் இந்த திரைப்படத்தை 40 நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் முடிக்கத் திட்டமிட்டதாக கூறியுள்ளார். ஆனால், படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றவுடன் அங்கிருந்த சூழல் அவரை பல விஷயங்களை மாற்றத் தீர்மானிக்க வைத்தது. இதனால் 200 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நீடித்துள்ளது.  

விழாக்களில் திரையிடுவதற்காக, இரண்டு பாகங்களையும் இணைத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலான வெர்ஷன் ஒன்றை உருவாக்கினார். விஜய் சேதுபதிக்கு 8 நாட்கள் கால்ஷீட் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் 120 நாட்கள் நடித்து விட்டார்.

இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மிச்சம் உள்ளதால், டிசம்பர் 20 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News